Friday, February 16, 2018

ஆறு குலத்தாருடைய குலகுரு பட்டாபிஷேக விழா

அனைவருக்கும் நமஸ்காரம்,

ஆறு குலத்தாருடைய குலகுரு பட்டாபிஷேக விழா:

தேதி  - 19.02.2018
நேரம்: காலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை
இடம் : கீரனூர் ஸ்ரீ  மாரியம்மன் கோயில் , கீரனூர்,  காங்கயம்


நமது கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக, ஆறு குல மக்களுக்கும் குலகுருவாக உள்ள குருக்களுக்கு பிடடாபிஷேகம் நடக்க உள்ளது.

சுமார் 30-40 வருடங்களுக்கு முன் சிஷ்யர்களாகிய நம்  கோரிக்கையை  வேண்டி ஒன்றாய் இருந்த நமது கீரனூர் மடம் இரு மடங்களாக ஆனது.

அடுத்த தலைமுறையை சேர்ந்த்வர்களான தற்போதைய குருக்களுக்கு பட்டாபிஷேகம் செய்து வைப்பது சிஷ்யர்களான நமது கடமை. அதற்கு ஏற்றாற்போல், குருக்களும், பாரம்பரியம் தவறாமல் ஸ்ரீ செல்வநாயகி அம்மனுக்கும், ஸ்ரீ அகிலாண்டீஷ்வரி சமேத ஆதீஷ்வர சுவாமிக்கும்  ஆத்மார்த்த பூஜை செய்து, சிஷ்யர்களான நமது நன்மைக்கு தங்கள் வாழ்வை அற்பணிக்கிறார்கள்.

அது சமயம், நமது கோயிலை சேர்ந்த அனைவரும் இந்த பிட்டாபிஷேக விழாவிற்கு வருகை தந்து சிவ அருளும் , குறு அருளும் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தற்பொழுது இருக்கும் இரு குருக்களில் தங்களுக்கு எந்த குலகுரு என்று சந்தேகம் இருப்பின், குலகுருவிடம் நீங்களே சென்று தங்கள் பெயர் மற்றும் சொந்த ஊர் பெயரை சொல்லியும் , அப்பா , தாத்தா காலத்தில் நமது ஊருக்கு சஞ்சாரம் வந்த வசூல் நோட்டில் தங்களது விபரம் கண்டு , எந்த குலகுருவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

அனைவரது ஊர் பெயரும் , நம் வீட்டு பெரியவர்கள் பெயரும் , தத்தமது குலகுருவிடம் உள்ள வசூல் நோட்டில் கண்டிப்பாக இருக்கும். அதன்படி, தங்கள் குலகுருவை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.

கீரனூர் மடம் குலகுருக்கள்:
1.  சிவஸ்ரீ V.S சிவசேனாபதி சிவாச்சியார் - மாமகேஷ்வரி - முத்து விநாயகர் கோயில், கொங்கு நகர்   3வது  வீதி, ஊத்துக்குளி ரோடு, திருப்பூர்
போன் :
99439 97008
9600823333
9994613333

2. சிவஸ்ரீ V.S பாலசுப்ரமண்ய சிவாச்சியார் - யோகலட்சுமி - சரவணா நகர், சிவன்மலை -
போன் - 9597009506

பட்டாபிஷேகம் முடிந்தவுடன் சில மணித்துளிகளில் கும்பாபிஷேகத்தின் முதல் கட்டமாக கணபதி ஹோமம் நடைபெறுகிறது.



2005 ஆண்டு எடுக்கப்பட்ட நமது கோவில் புகைப்படங்கள்