Wednesday, September 4, 2019

1972 ம் வருடம் செல்வநாயகி அம்மன் கோவில் நடந்த திருப்பணி சம்பந்தமான பத்திரிகை

அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஆதிஸ்வரர் திருக்கோயில்  மற்றும்   அருள்மிகு செல்வநாயகி அம்மன் 

பழங்கால   அதாவது    47   ஆண்டுகளுக்கு   முன்பாக   நடந்த   திருப்பணி  சம்பந்தமான    பத்திரிகை இன்றளவும்    பொக்கிஷமாக    நமது  காணி  சொந்தத்தின்   கைகளில் தற்போது   உங்கள்  பார்வைக்காக கண்களில்   ........

இந்த   பத்திரிகை கோபி   யை  அடுத்து   உள்ள   ஓடத்துறையை  சேர்ந்த   ராஜேஷ்வரன் கவுண்டர்       அவர்கள்  அந்துவன்    குலம்   வைத்திருந்து   நமது  இராமேஸ்வர தீர்த்தக்குழு   தலைவருமான   சுப்பிரமணி  அந்துவன்  குலம்  சுப்பிரமணி  அவர்களால்  பெறபட்டு  தங்கள்   பார்வைக்கு     அளித்திருக்கிறோம்

பக்தியுடன்  குலதெய்வ தின்   பத்திரிகை  யை   பிரசாதம்   போல்  47   வருடங்களாக    பாதுகாத்திருந்த   அவரை        மனதார   பாராட்டுகிறோம்  
வாழ்க  வளமுடனும் நலமுடனும்.

https://www.facebook.com/sriselvanayakiamman/


Wednesday, June 13, 2018

ஸ்ரீ செல்வநாயகி அம்மன் கீரனூர் மரம் நடும் விழா நிகழ்ச்சி 13.06.2018

செல்வநாயகி  அம்மன்  கோயில்   வளாகத்தை  சுற்றி காங்கயம் துளிகள் இயக்கம் சார்பில் சுமார் 15 வகையான 250     மரம்    வைக்கப்பட்டுள்ளது    மகிழ   வகை   மரம்   நல்ல  வாசணை  தருவதுடன்    அலையும்   மனதை   ஒருமுகபடுத்துவதில்  சக்தி  பெற்ற  மரம்   வறட்சி யை  தாங்கி  வளருவதில்  சிறப்பானது    எந்த  சூழலிலும்   பச்சை  தன்மை   மாறாதது   என்பதினால்  இந்த  மரம்  தேர்வு  செய்யப்பட்டுள்ளது.....








ஸ்ரீ செல்வநாயகி அம்மன் கீரனூர் பொது குழு அழைப்பு ( 26.06.2018 )

கும்பாபிஷேக்   வரவு  செலவு    சமர்பிக்கப்பட்டு     எதிர்கால   திட்டங்கள்   ஆலோசனைகளுக்கும்     தங்கள்  பார்வைக்கும்  வைக்க   இந்த  கூட்டம் கூட்டப்படுகிறது.




Saturday, May 19, 2018

60 குலக்காணியாளர்கள்

60 குலக்காணியாளர்கள்
                   1 . அந்துவன்            31 . தூரன்
                   2 . ஆதி                      32 . தோடை
                   3 .ஆந்தை                 33 . நீருண்ணியர்
                   4 . ஆடர்                    34 . பனங்காடை
                   5 . ஈஞ்சன்                35. பண்ணை
                   6 . ஓதளான்             36 . பதரியர்
                   7. கண்ணன்             37.பயிரன்
                   8.ஆவின்                  38 .பதுமன்
                   9.கணவாளன்          39.பனையன்
                  10 .காடை                  40.பாண்டியன்
                  11.காரி                        41.பில்லன்
                  12 .கீரன்                     42.பனுமன்
                  13.குயிலர்                 43 .பூசன்
                  14 .குழையர்             44 .பூந்தந்தை
                  15 .கூறை                  45 .பெரியன்
                  16 .கோவேந்தர்        46 .பெருங்குடி
                  17 .சாத்தந்தை          47 .பொன்னன்
                  18 .செங்கண்ணன்   48 .பொடியன்
                  19 .செம்மண்            49 .பொருள்தந்த
                  20 .செம்பூத்தன்        50 .மணியன்
                  21 .செல்வன்             51 .மயிலா
                  22 .செவ்வாயர்         52 .மாடை
                  23 .செவ்வந்தி           53 .முத்தன்
                  24 .சேரன்                   54 .மூலன்
                  25 .சேடன்                  55 .மேதி
                  26 .செங்கண்ணி       56 .வெளியன்
                  27 .சோழன்                57 .வெண்ணெய்
                  28 .சிலம்பன்              58 .வேந்தன்
                  29 .சேரலன்                59 .வெளையன்
                  30 .தனஞ்செயன்       60 .வில்லி

1 . அந்துவன் குலம் :
                 கொங்கு குலத்தில் அந்துவன் கூட்டமே முதன்மையானது. அந்துவன் செரலிரும்பொறை என்ற சேர அரசன் இருந்தான். கொங்கு வேளாளர்களுடன் மண உறவு வைத்துள்ள சேரர்குலமான அந்துவன் சேரல் வழியினர் அந்துவன் கூட்டத்தினர் ஆவர். அந்துவன்என்பது பெயர் சூட்டு இதற்கு பொருள் தேடவேண்டிய அவசியம் இல்லை. அந்துவன் குலத்தினர் கரூர்வட்டத்து நாகம்பள்ளியை முதற்காணி இடமாகக் கொண்டனர். செல்லாண்டியம்மன் குலதெய்வம். காங்கேயம், கீரனூர், பவானி, அவிநாசி , கோவை வட்டங்களில் மிகுதியாக உள்ளனர். நாகம்பள்ளி, கீரனூர், ஆதியூர். மோடமங்கலம், பாலமேடு, தூரம் பாழ, கோழையூர், அந்தியூர், கோவில்பாளையம், நாமக்கல் ஆகியன காலணி இடங்களாம்.

Friday, February 16, 2018

ஆறு குலத்தாருடைய குலகுரு பட்டாபிஷேக விழா

அனைவருக்கும் நமஸ்காரம்,

ஆறு குலத்தாருடைய குலகுரு பட்டாபிஷேக விழா:

தேதி  - 19.02.2018
நேரம்: காலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை
இடம் : கீரனூர் ஸ்ரீ  மாரியம்மன் கோயில் , கீரனூர்,  காங்கயம்


நமது கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக, ஆறு குல மக்களுக்கும் குலகுருவாக உள்ள குருக்களுக்கு பிடடாபிஷேகம் நடக்க உள்ளது.

சுமார் 30-40 வருடங்களுக்கு முன் சிஷ்யர்களாகிய நம்  கோரிக்கையை  வேண்டி ஒன்றாய் இருந்த நமது கீரனூர் மடம் இரு மடங்களாக ஆனது.

அடுத்த தலைமுறையை சேர்ந்த்வர்களான தற்போதைய குருக்களுக்கு பட்டாபிஷேகம் செய்து வைப்பது சிஷ்யர்களான நமது கடமை. அதற்கு ஏற்றாற்போல், குருக்களும், பாரம்பரியம் தவறாமல் ஸ்ரீ செல்வநாயகி அம்மனுக்கும், ஸ்ரீ அகிலாண்டீஷ்வரி சமேத ஆதீஷ்வர சுவாமிக்கும்  ஆத்மார்த்த பூஜை செய்து, சிஷ்யர்களான நமது நன்மைக்கு தங்கள் வாழ்வை அற்பணிக்கிறார்கள்.

அது சமயம், நமது கோயிலை சேர்ந்த அனைவரும் இந்த பிட்டாபிஷேக விழாவிற்கு வருகை தந்து சிவ அருளும் , குறு அருளும் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தற்பொழுது இருக்கும் இரு குருக்களில் தங்களுக்கு எந்த குலகுரு என்று சந்தேகம் இருப்பின், குலகுருவிடம் நீங்களே சென்று தங்கள் பெயர் மற்றும் சொந்த ஊர் பெயரை சொல்லியும் , அப்பா , தாத்தா காலத்தில் நமது ஊருக்கு சஞ்சாரம் வந்த வசூல் நோட்டில் தங்களது விபரம் கண்டு , எந்த குலகுருவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

அனைவரது ஊர் பெயரும் , நம் வீட்டு பெரியவர்கள் பெயரும் , தத்தமது குலகுருவிடம் உள்ள வசூல் நோட்டில் கண்டிப்பாக இருக்கும். அதன்படி, தங்கள் குலகுருவை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.

கீரனூர் மடம் குலகுருக்கள்:
1.  சிவஸ்ரீ V.S சிவசேனாபதி சிவாச்சியார் - மாமகேஷ்வரி - முத்து விநாயகர் கோயில், கொங்கு நகர்   3வது  வீதி, ஊத்துக்குளி ரோடு, திருப்பூர்
போன் :
99439 97008
9600823333
9994613333

2. சிவஸ்ரீ V.S பாலசுப்ரமண்ய சிவாச்சியார் - யோகலட்சுமி - சரவணா நகர், சிவன்மலை -
போன் - 9597009506

பட்டாபிஷேகம் முடிந்தவுடன் சில மணித்துளிகளில் கும்பாபிஷேகத்தின் முதல் கட்டமாக கணபதி ஹோமம் நடைபெறுகிறது.



2005 ஆண்டு எடுக்கப்பட்ட நமது கோவில் புகைப்படங்கள்